top of page

கர்ப்பிணித் தாய்மார்கள் 11.11 காலைஅமைதியை கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Oct 27, 2024

1 min read

0

6

0

MA Parvathi




உலகத்தில் உள்ள அனைவரும் அமைதியை கடைபிடிக்கும் நேரத்தில் அமைதியை கடைபிடிப்பதால் உண்மையான மாறாத நிலைத்த அறிவு, தனக்கும், தன் குழந்தைக்கும் எளிதில் கிடைக்கும்.

  • பெற்றவளும் தாய் அல்ல.

  • பேணி வளர்ப்பவளும் தாய் அல்ல.

  • அறிவை எவர் ஊட்டி வளக்கின்றார்களோ அவரே தாய்.


இதனால் ஒரு கர்ப்பிணித்தாய் கர்ப்பத்திலேயே குழந்தைக்கு அறிவை ஊட்டி வளர்க்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். நேர்மறையான எண்ணத்தை தூண்டி, அறிவில் தெளிவை உருவாக்கி பக்குவம் நிறைந்த வாழ்க்கை திறமையை உண்டாக்கி, சுத்தமான எல்லா நிலைகளிலும் ஒழுக்கமான செயலை செய்ய வைத்து, தேவையான உணவை உண்ண வைத்து,  உயிர் ஊட்ட சக்திகளை நிறையச் செய்து தன்னைத்தானே பேணி பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்புணர்வையும் உண்டாக்கி நோய் எதிர்ப்பு சக்தி மேலோங்கச் செய்து பிரசவ பயத்தை நீக்கி வளமான,  அமைதியான வாழ்வு வாழச் செய்கிறது.



இவை அனைத்தும் பூரணமாக கிடைத்த வாழ்க்கையை, கர்ப்பிணி வாழும் போது கர்ப்ப கால நோய்களான 

  • உயர் இரத்த அழுத்த நோய்.

  •  இரத்த சோகை. 

  • நீரழிவு நோய். 

  • உடல் எடை அதிகரித்தல் மற்றும் குறைவு. 

  • பனிநீர் அதிகரித்தல் மற்றும் குறைவு. 

  • வலிப்பு நோய்கள். 

  • மன அழுத்தம். 

  • தொற்று நோய்கள். 

போன்றவைகளிலிருந்து  தன்னை விடுவித்து ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை நிலை ஏற்படும்.



தாய்ப்பால் கொடுக்கும் ஆர்வத்தை அதிகரித்து அன்பு,  இணக்கம்,  போன்ற பண்புகளை உருவாக்கும்.


குழந்தை பிறக்கும்போதே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து உடல் ஆரோக்கியத்துடன் மனவளத்துடன் எல்லா சக்திகளும் நிறைந்து தெய்வீக சக்திகள் எல்லாம் பெற்று தெய்வீகமாகத் திகழும்.

குறிப்பு:

11.11 காலை அமைதியை கடைபிடித்து தனக்கும், குடும்பத்திற்கும், தேசத்திற்கும், உலகத்திற்கும், நம்மை படைத்த மகா சக்திக்கும் ஆரோக்கியத்துடன் கூடிய மெய்யறிவான தெய்வீக சக்திகள் பொருந்திய குழந்தைகளை ஈன்றெடுக்க கர்ப்பிணித் தாய்மார்களே 1 நிமிட அமைதியை கடைபிடிக்க, வாரீர்!வாரீர்!வாரீர்!


சந்தோசம்!சந்தோசம்!சந்தோசம்!


  • வம்சங்கள் யாவும் வாழையடி வாழையாய் தழைத்து ஓங்கட்டும்!

  • வம்சம் விருத்திகள் ஆகட்டும்!

  • குலவிருத்திகள் ஆகட்டும்!

  • தெய்வீக விருட்சங்கள் எல்லாம் விருத்தியாகட்டும்!

  • வளர்க மெய்ஞானம்!

  • வாழ்க சமாதானம்!

  • உலக நலம் காப்போம்!

  • உலக அமைதி காப்போம்!

  • பிரபஞ்ச நலம் காப்போம்!

நன்றி! நன்றி!நன்றி!






Oct 27, 2024

1 min read

0

6

0