Where is Peace? எதில் அமைதி ?
Sep 22, 2024
1 min read
0
19
0
நாடுவதை அடைவதிலும்,
தேவைகளின் பூர்த்தியிலும்,
தேடல்களின் நிறைவிலும்,
ஐயங்களின் தெளிவிலும்,
நமக்கு கிடைப்பது அமைதி.
எண்ணங்களின் திறவுகோல் அமைதி
ஏக்கங்களின் தீர்வு அமைதி
அமைதியை உருவாக்க இயலாது
அது இயல்பான இருப்பு நிலை
ஊக்கமும் உற்சாகமும் தரும் அமைதி
ஊக்கமும் ஆக்கமும் தரும் அமைதி
அறிவின் பிறப்பிடம் அமைதி
ஆற்றலின் இருப்பிடம் அமைதி
ஆனந்தத்தின் ஊற்று அமைதி
அழகின் ஆதாரம் அமைதி
சுய இருப்பு நிலையே அமைதி
அமைதி ஓய்வு மட்டுமல்ல
உழைப்பையும் தரும்
சற்குருவே, சரணம், வணக்கம். சந்தோசம்,
அமைதி
அணைத்து உயிர்களின் இயல்பு அமைதி,
ஆற்றலின் பிறப்பிடம் அமைதி,
இறைப்பேருணர்வோடு இணைக்கும் அமைதி,
(இன்ப ஊற்றாய் நிறைந்த அமைதி)
(இறைநிலையை உணர்த்தும் அமைதி,)
ஈச நிலையை உணர்த்தும் அமைதி,
உள்ளிருந்து வழிநடத்தும் அமைதி,
ஊக்கமும் ஆக்கமும் தரும் அமைதி,
எண்ணங்களை சீரமைக்கும் அமைதி,
ஏகாந்த நிலையே அமைதி,
ஐம்புலன்களின் ஒடுக்கம் அமைதி,
ஒவொரு அணுவிலும் நிறைந்துள்ள அமைதி,
ஓம்காரத்தின் உட்பொருள் அமைதி,
ஒளடதமாய் பிறவி பெருநிலை அருளும் அமைதி,
ஒளடதமாய் நமக்கு ஒரு நிமிட அமைதி🙏
ஃதே மனித பிறவியின் முற்று நிலை
ஒளடதமாய் நாம் இயற்றும் ஒரு நிமிட அமைதி,
அஃதே, இப்பூவுலகை காக்கும் - இது உறுதி.
சந்தோசம்
MA.Sarojini